அழகிரியின் மேற்பார்வையில் 10 தொகுதிகள்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி போட்டியிடக் கோரி அவரை அவரது ஆதரவாளர்கள் நெருக்கி வருகின்றனர்.
அவர் போட்டியிடாவிட்டால் அவரது மனைவி காந்தியை நிறுத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
மதுரையில் அழகிரி போட்டியிட வேண்டும் என்று கோரி அவரது பெயரில் திமுக வேட்பாளர்களுக்கான மனுக்களை வாங்கி பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதே போல வேறு பல தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அழகிரிக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் திட்டம் அழகிரியிடம் இல்லை என்றே தெரிகிறது. தனக்கு கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் திமுகவையும் கூட்டணிக் கட்சியான காங்கிரசையும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கட்சியி்ன் தென் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் இப்போதே ஆலோசனைகளை ஆரம்பித்துவிட்ட அழகிரி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
தென் தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவும் காங்கிரசும் அழகிரியின் மேற்பார்வையில் தேர்தல் சந்திக்கவுள்ளன.
இந்த 10 தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை அழகிரி கேட்டு வாங்கியுள்ளார். மேலும் தொகுதிகளின் நிலவரம் குறித்து கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் அழகிரி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.
இந்தத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் அழகிரியின் பங்கு அதிகமாகவே இருக்கும் என்பதால் சீட் கேட்டு அவரை நச்சரிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
மதுரையில் 3 இடைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணியை அமோக வெற்றி பெற செய்த அழகிரி அதே வியூகத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலுலும் பயன்படு்த்தவுள்ளார் என்கிறார்கள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications