ஐஐஎம் மாணவர்களிடம் ஆதரவு திரட்டும் பாஜக
டெல்லி: இந்திய பிசினஸ் கல்விக் கழகங்களில் (ஐஐஎம்) பாஜகவுக்கு ஆதரவு சேகரிக்க அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஐஐஎம் மாணவர்களின் வாக்குகளை திரட்ட அவர் முடிவு செய்துள்ளார்.
இது தேர்தல் காலம், முடிந்தவரை அத்தனை வாக்காளர்களையும் தங்கள் பக்கம் இழுக்க கட்சிகள் தீவிரமாக உள்ளன.
அந்த வகையில், ஐஐஎம் எனப்படும் இந்திய பிசினஸ் கல்விக் கழகங்களின் மாணவர்களின் ஆதரவைத் திரட்ட அத்வானி திட்டமிட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்களுக்கு அவர் செல்லவுள்ளார்.
ஐஐஎம் தவிர பிற பிசினஸ் கல்விக் கூடங்களுக்கும் அவர் போகப் போகிறார். பாஜகவுக்கு மாணவர்களின் ஆதரவை அவர் சேகரிக்கவுள்ளார்.
இன்னும் சில நாட்களில் அத்வானியின் இந்த ஐஐஎம் விசிட் தொடங்கவுள்ளது. இந்த பிரசாரத்திற்கு அத்வானி@காம்பஸ் என பாஜக பெயரிட்டுள்ளது. கட்சியின் இளைஞர் அணி இந்த பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பிரசாரத்தின் மூலம் இளைஞர்களை பெருமளவில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதே பாஜகவின் நோக்கமாகும். மேலும் இளைஞர்கள் மீதும், அவர்களது வேலை வாய்ப்பு குறித்தும், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியின் மீதும் பாஜகவுக்கே உண்மையான அக்கறை உண்டு என்பதைக் காட்டும் வகையிலும் இந்தப் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டுள்ளது.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications