வக்கீல்களுடன் தலைமை நீதிபதி பதவியேற்கவுள்ள கோகலே பேச்சுவார்த்தை
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ஹேமந்த் லட்சுமண் கோகலே, இன்று வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களைத் தாக்கிய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையில், வக்கீல்கள்தான் மோதலுக்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வக்கீல்கள் கலகத்தில் ஈடுபட்டதால் அதைத் தடுக்க போலீஸாரும் அத்துமீறி திட்டமிட்டு செயல்பட்டதாகவும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.
இதையடுத்து ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையை புறக்கணிப்பதாகவும், தங்களது போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் உயர்நீதிமன்ற வக்கீல்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கோகலே நேற்று சென்னை வந்தார்.
ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள அவர் இன்று வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கோகலேவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்புமாறு வக்கீல்களிடம் நீதிபதி கோகலே கேட்டுக் கொண்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், 11ம் தேதி கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளார். அதுவரை போராட்டம் தொடரும். அதில் மாற்றமில்லை என்று தெரிவித்தனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications