கர்நாடகம்-சாப்ட்வேர் ஏற்றுமதி சரிகிறது

இருப்பினும் இதன் காரணமாக பெரிய அளவில் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை இருக்காது என மாநில அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அசோக் குமார் மனோலி கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் (2008-09) தகவல் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியில் ஐந்து சதவீதம் வீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
2007-08ம் ஆண்டில் கர்நாடகத்தின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி, ரூ. 56 ஆயிரத்து 500 கோடியாக இருந்தது. இந்த அளவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கக் காரணம் இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களே. நாட்டின் மொத்த தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில், கர்நாடகத்தின் பங்கு மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி கர்நாடக தகவல் தொழில்நுட்பத் துறையை வெகுவாக பாதிக்கத் தொடங்கியுள்ளது.
பிபிஓ நிறுவனங்கள்தான் பெரும் பாதிப்பை சந்திக்கத் தொடங்கியுள்ளன. பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஒன்றரை முதல் 2 லட்சம் வரையிலான பிபிஓ ஊழியர்களின் கதி குறித்தும் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
மனோலி தொடர்ந்து கூறுகையில், பெரிய ஐடி நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடியுள்ளது. அதேசமயம், ஆளெடுப்பு போன்றவை தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications