அவுட்சோர்ஸிங் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் - மூடீஸ்
டெல்லி: அவுட்சோர்ஸிங் செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
அவுட்சோர்சிங் செய்ய இந்தியா தான் சிறந்த இடம். குறைந்த விலையில் இங்கு கிடைக்கும் சேவைகள் வேறு எங்கும் கிடைக்காது. எனவே என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து இந்தியாவே முன்னணியில் இருக்கும் என மூடீஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, தாக்கல் செய்த பட்ஜெட்டில், அவுட்சோர்ஸிங் செய்யும் நிறுவனங்களுக்கு வரி சலுகை கிடையாது என அறிவித்தார். இதனால், ஏற்கனவே உலக பொருளாதார வீழ்ச்சியால் சரிவை சந்தித்திருக்கும் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் ஆட்டம் கண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற இடம் இந்தியா தான் என்கிறது அமெரிக்காவின் நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடீஸ்.
இது குறித்து அந்நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ஷெர்மான் சான் கூறுகையில்,
அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதலிடம். இதற்கு இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களும், ஆங்கில புலமை அதிகம் கொண்ட இளைஞர்களும் தான் காரணம்.
இந்த வேலைகளை இதைவிட குறைந்த செலவில் மேற்கு ஐரோப்பாவில் செய்ய முடியாது.
தற்போது உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பிபிஓ துறை பின்னடைவை சந்தித்திருக்கும். இது விரைவில் மீண்டு வரும். தற்போது முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதால் வளர்ச்சி வேகம் மெதுவாக தான் இருக்கும் என்றார் சான்.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கத்தை வைத்து அதிபதி ஆகலாம்.. 312% ரிட்டர்ன்.. ஆர்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு.. யூஸ் பண்ணுங்க! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications