செஞ்சியார்-எல்ஜியுடன் திமுகவில் இணையும் மு.கண்ணப்பன்
சென்னை: மதிமுக அவைத் தலைவரான மு.கண்ணப்பன் வரும் 17ம் தேதி செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசனுடன் திமுகவில் இணைவார் என்று தெரிகிறது.
திமுகவை விட்டு வைகோ விலக்கப்பட்டபோது அவருடன் இணைந்து கட்சியை விட்டு வெளியேறிய மூத்த தலைவர் கண்ணப்பன்.
இதையடுத்து மதிமுகவை தொடங்கிய வைகோ கட்சியி்ன் பொருளாராக கண்ணப்பனை நியமித்தார். பின்னர் அவைத் தலைவராக இருந்த எல்.கணேசன் கட்சியை விட்டு விலகி, மதிமுகவை உடைத்தபோது கண்ணப்பனை அவைத் தலைவராக்கினார்.
ஆனாலும் வைகோ-கண்ணப்பன் இடையே நட்பில் பூசல் ஏற்பட்டது. வைகோவின் பல முடிவுகளை கண்ணப்பன் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் அமைதியாக இருந்து வந்தார். அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை வைகோ எடுத்தபோது கண்ணப்பன் அதை தீவிரமாக எதிர்த்தார்.
இதையடுத்து அவர் திமுகவுக்குத் திரும்பலாம் என்று கூறப்பட்டது. இதை கண்ணப்பன் மறுத்தே வந்தார்.
இந் நிலையில் வைகோவிடம் சொல்லாமல் கொள்ளாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதியை போய் பார்த்தார் கண்ணப்பன். இதனால் அதிருப்தி அடைந்தார் வைகோ.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பூசல் முற்றியது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கிறார் கண்ணப்பன்.
டெல்லியில் மதிமுக சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், சென்னையில் நேற்று நடந்த கட்சி ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றுக்கு அவர் வரவில்லை.
இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில், மதிமுக பிரமுகர் சின்னச்சாமி இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதற்கு வைகோ தலைமை தாங்கினார்.
தனது பகுதியில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்காவது கண்ணப்பன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வைகோவை சந்திப்பதை தவிர்க்க நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கண்ணப்பன் வந்தார். திருமணத்திற்கு அவர் வரவில்லை.
இந் நிலையில் வரும் 17ம் தேதி போட்டி மதிமுகவை திமுகவுடன் இணைக்கின்றனர் அதன் தலைவர்களான செஞ்சி ராமச்சந்திரனும் எல்.கணேசனும்.
அந்த நிகழ்ச்சியில் கண்ணப்பனும் திமுகவில் இணைவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications