குஜராத்-காங் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அகமதாபாத்: குஜராத்தில் 12 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரும் முன்னாள் குஜராத் முதல்வருமான சங்கர்சிங் வகேலா பஞ்ச்மஹால் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.
இந்த மாநிலத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 12 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் தீன்ஷா படேல் மற்றும் நரேன் ரத்வா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தீன்ஷா கேடா தொகுதியிலும், ரத்வா சோட்டா உதய்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அத்வானியை எதிர்த்து யார்?:
பாஜக தலைவர் அத்வானி இந்த மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications