நவீன் பட்நாயக் இந்துக்களின் எதிரி-விஎச்பி
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் இந்துகளுக்கு எதிரானவர் என விஸ்வ இந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரிஸ்ஸாவில் பாஜக-நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கூட்டணி சமீபத்தில் பட்டென உடைந்தது. இதையடுத்து இடதுசாரிகளுடன் அவர் கைகோர்த்துள்ளார்.
இந் நிலையில் விஎச்பி அவரை தாக்கியுள்ளது. அதன் தலைவர் அசோக் சிங்கால் கூறுகையில்,
நவீன் பட்நாயக் இந்துக்களுக்கு எதிரான கொள்கையை உடையவர். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளேன்.
சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதியை கொலை செய்தது யார் என்பது மாநில அரசுக்கு தெரியும். இந்த கொலையின் பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள் என்பதையும் மாநில அரசு நன்கு அறியும்.
எனினும், குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை நடந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை ஒரு குற்றவாளியைக்கூட மாநில அரசு கைது செய்யவில்லை என்றார் சிங்கால்.
மதமாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்தி்ல் சேர்த்து வந்த லக்ஷ்மணானந்தாவை நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து ஒரிஸ்ஸாவில் கிருஸ்துவர்கள் மீது ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவை கொலை வெறித் தாக்குதல் நடத்தின. கன்னியஸ்திரி ஒருவரும் கற்பழிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications