மாணவி மர்ம சாவு-பார்வையற்றோர் ஊர்வலம்
மதுரை: திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததற்கு காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என கோரி மதுரையில் பார்வையற்றோர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளி விடுதியில் மலர் என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது மரணத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு சம்பந்தம் இருப்பதாக கருதப்படுகிறது. மாணவி மலரின் மரணத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆழ்வார்புரத்தில் இருந்து மதுரை ஆட்சியர் அலுவலம் வரை தாய் பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு ஒன்றை அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் தாய் சங்க அமைப்பாளர் சேதுராமன், சட்ட ஆலோசகர் ராமசாமி, செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications