தேனி யாருக்கு..?: தினகரனுக்கா மச்சானுக்கா?

Subscribe to Oneindia Tamil

Dinakaran
தேனி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் டிடிவி தினகரனுக்குப் பதில் அவரது மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் போட்டியிடலாம் என்றும் தெரிகிறது.

கடந்த முறை பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தினகரன், காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆருணிடம் தோற்றார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி தொகுதியை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் சசிகலாவின் அக்காள் மகனான தினகரன் தோற்றது அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தினகரனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கினார் ஜெயலலிதா. ஆனால் கடந்த சில காலமாக இவரை ஒதுக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா.

மேலும் தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழா, காது குத்து விழா என பல விழாக்களில் மறக்காமல் தலை காட்டும் டி.டி.வி. தினகரன் சமீப காலமாக எந்த விழாக்களுக்கும் வருவது இல்லை. அவர் அங்கு செல்லவும் ஜெயலலிதா தடை போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இந் நிலையில் தொகுதி மறுவரையில் பெரியகுளம் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் தினகரனுக்குப் பதில் அவரது மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவருக்குத்தான் இப்போது போயஸ் கார்டனில் பெரும் செல்வாக்கு.

இதனால் இவரே நிறுத்தப்படலாம் என்கின்றனர் அதிமுகவினர். ஆனால், தினகரனை எப்படியாவது சசிகலா இந்தத் தொகுதியி்ல் நிறுத்திவிடுவார் என்றும் இன்னொரு தரப்பு நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+