அத்துமீறிய யுஎஸ் போர் கப்பல்-வெளியேற்றிய சீனா
வாஷிங்டன்: சீன கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக யுஎஸ்என்எஸ் இம்பெகபிள் எனும் அமெரிக்க போர்க் கப்பலை சீன கப்பல்கள் சுற்றி வளைத்தன. அவற்றை அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறுமாறு எச்சரித்து விரட்டின.
யுஎஸ்என்எஸ் இம்பெகபிள் எனும் அமெரிக்க போர்க் கப்பல் ஆயுதங்கள் எதுவுமின்றி சீனாவின் ஹெய்னான் தீவுக்கு 150 கிமீ., தெற்கே போய் கொண்டிருந்தது. அப்போது அங்கு சீன கொடி ஏந்தி வந்த இரண்டு கப்பல்கள் அந்த இடத்தைவிட்டு உடனே விலகி செல்லுமாறு அமெரிக்க கப்பலுக்கு உத்திரவிட்டுள்ளன.
அதில் ஒரு சீன கப்பல், அமெரிக்க கப்பலுக்கு 25 அடிக்கு அருகில் வந்து விபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சக்கூடிய சூழலை உருவாகியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமையகமான பென்டகன் செய்திகுறிப்பு ஒன்று கூறுகையில்,
சீனர்கள் எங்கள் கப்பலுக்கு வேண்டுமென்றே தொல்லை தந்துள்ளனர். அமெரிக்க கப்பலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சீன கப்பல் ஒன்று மிக அருகில் வந்து பயமுறுத்தியது. சீனா சர்வதேச விதிமுறைகளை மீறி வருகிறது.
அமெரிக்க கப்பல் சர்வதேச கடற்பகுதியில் தான் சென்று கொண்டிருந்தது. சீனா இது போல் அடு்த்த முறை செய்யாது என்றும், பொறுப்புடன் நடந்து கொள்ளும் எதிர்பார்க்கிறோம் என்றது.
ஆனால் சீனா அமெரிக்காவின் குற்றாச்சாட்டை மறுத்துள்ளது. எங்கள் எல்லைக்கு அனுமதியின்றி நுழைந்ததால் தான் அது விரட்டப்பட்டது என்கிறது. இந்த விவகாரத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications