48 மணிநேரத்துக்குள் தொகுதிப் பங்கீடு - காங்.குக்கு மம்தா கெடு

மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி, மம்தா பானரிஜியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடத்த தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு 14, திரிணமுல் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை காங்கிரஸ் தங்களது இறுதி முடிவை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் முடிவை அறிவிக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் மம்தா பானர்ஜி கூறுகையில்,
கேசவ்ராவ், என்னை தொடர்பு கொண்டு மேலும் கால அவகாசம் கேட்டார். இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே நாங்கள் காத்திருக்க முடியும். இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் காங்கிரஸ் இருந்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும். இடதுசாரிகள் ஏற்கனவை தங்களது பிரச்சாரத்தை துவக்கிவிட்டன. இதில் நாங்கள் தற்போது பின்தங்கிவிட்டோம்.
பங்காரா தொகுதியை காங்கிரஸ் கேட்டது. அதை விட்டுகொடுத்தோம். தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தின் தெற்கு பகுதியில் 5 தொகுதிகளும், வடக்கு பகுதியில் 9 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களை நாங்கள் கேட்கவில்லை.
எனவே, 48 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்காவிட்டால் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சில இடதுசாரி நண்பர்கள் இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் எளிதாக வெற்றி பெற இனியும் அனுமதிக்க மாட்டோம் என்றார் மம்தா பானர்ஜி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications