திமுகவிடம் 20 தொகுதிகள் கேட்க காங் திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் அடங்கிய குழு இன்று மாலை திமுக குழுவுடன் பேச்சு நடத்தவுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் குழு இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் கூடி விரிவான ஆலோசனை நடத்தியது. அதில் திமுகவிடம் 20 தொகுதிகள் வரை கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி:
நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் எடுக்க வேண்டிய நிலை, எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாங்கள் தொடர்ந்து கூடி பேசுவோம். இன்று மாலை அறிவாலயத்துக்கு சென்று தோழமை கட்சியான திமுகவுடன் பேசுவோம் என்றார்.
கேள்வி: வேறு எந்த கட்சியுடன் பேசுவீர்கள்?
பதில்: பாமக போன்ற கட்சிகள் எங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றந. ஒவ்வொரு கட்சியினருடனும் அடுத்தடுத்துப் பேசுவோம்.
கேள்வி: பாமக உங்கள் அணியில் இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் பாமக தரப்பில் அப்படி அறிவிக்கவில்லையே?
பதில்: தேர்தல் யுக்திகளை வகுக்க, எதிர்கால நலன்கள் பற்றி சிந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். அதே போல் அவர்களும் பேச வேண்டி இருக்கிறது.
கேள்வி: திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்பீர்களா?
பதில்: கண்டிப்பாக கேட்போம்.
கேள்வி: தேமுதிகவை உங்கள் கூட்டணிக்கு அழைப்பீர்களா?
பதில்: சோனியாவின் தலைமையை ஏற்கிற, மதசார்பற்ற சக்திகள் ஒன்றாக இணைய வேண்டும். அதை வரவேற்கிறோம் என்றார் தங்கபாலு.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications