சென்னை-திமுக பஞ்சாயத்து தலைவர் கொலை
சென்னை: சென்னை அருகே திமுகவைச் சேர்ந்த திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் குவாரி தொழிலில் ஏற்பட்ட மோதலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் லாரிகளை தீவைத்து எரித்தனர்.
சென்னை அருகே உள்ள திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் ராமச்சந்திரன். 43 வயதான இவர் திமுகவைச் சேர்ந்தவர். குவாரித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
அப்பகுதியில் ஒரு குவாரியை ஏலம் எடுத்து நடத்தி வந்தார். அவருக்கும் அதே பகுதியில் குவாரி நடத்தி வரும் இன்னொருவருக்கும் இடையே தொழில்போட்டி நிலவி வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில், ராமச்சந்திரன், தனது நண்பரான ஸ்டீபனுடன், குவாரிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் அவரை வெட்டி கொன்றனர்.
இதையடுத்து ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர். எதிர்த்தரப்பு குவாரிக்குச் சென்ற அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை தீவைத்துக் கொளுத்தினர். டிராக்டர் ஒன்றும் எரிக்கப்பட்டது. குவாரி அலுவலகமும் தீக்கிரையானது.
அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திரிசூலம் பகுதியில் அவ்வப்போது கொலைகள், தாக்குதல்கள், மோதல் என தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications