இதய நோயால் உயிர் பிழைக்க போராடும்.. ஒரு வயதுக் குழந்தை கீதாலட்சுமி! நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 1.2 வயது ஆன குழந்தை கீதாலட்சுமி, பிறவியிலேயே இதயக் குறைபாட்டால் (Congenital Heart Disease) பாதிக்கப்பட்டுள்ளார். இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அவசர இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இக்குழந்தையை நாம் நினைத்தால் காப்பாற்ற முடியும்.
வெங்கடேசன் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரின் ஒரே மகளான கீதாலட்சுமிக்கு, பிறந்தது முதலே உடல் எடை கூடாமை, அடிக்கடி ஏற்படும் சுவாசத் தொற்று மற்றும் இதயத் துடிப்பில் அசாதாரண சத்தம் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மியாட் (MIOT) மருத்துவமனை நடத்திய இலவச இதயப் பரிசோதனை முகாமில், குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை (Moderate-sized Ventricular Septal Defect - VSD) இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, குழந்தைக்கு உடனடியாக 'VSD Closure' மற்றும் 'Aortic Valve Repair' ஆகிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும். இந்தச் சிகிச்சைக்கு சுமார் ரூ.3,00,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் வெறும் 15,000 ரூபாய் மட்டுமே. இந்தச் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வரும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாமல் அந்தப் பெற்றோர் தவித்து வருகின்றனர். ஆனால் குழந்தை கீதாலட்சுமியின் உயிரைக் காக்க நாம் நினைத்தால் முடியும்.

நம்மால் முடிந்த சிறிய தொகையை கொடுத்து உதவினால், கீதாலட்சுமியை காப்பாற்றிவிட முடியும். எனவே முடிந்த உதவியை இன்றே செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications