"ராமதாஸை நம்பி செலவு செய்தவர்களை இப்போது நட்டாற்றில்.." அப்பா மகன் சேர்ந்த நிலையில் அருள் புலம்பல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, தற்போது இணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், பாமகவின் உள்அரசியல் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. ராமதாஸ் தரப்பு ஆதரவாளராக அறியப்பட்ட சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அருள், தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அருள், பாமக தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பல கோடி ரூபாயை செலவு செய்தவர்களை நட்டாற்றில் விட்டுள்ளார் ராமதாஸ் என அருள் கூறியுள்ளார்.

MLA Arul

அருள் பேட்டி

செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ அருள் பேசுகையில், "அய்யா ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் கடந்த ஓராண்டுக்கு முன்பே இணைந்து செயல்பட்டிருந்தால், பாமகவினர் யாரும் இன்று கடனாளியாக மாறி நடுத்தெருவில் நின்றிருக்க மாட்டார்கள்.

இந்த இணக்கம் முன்பே நடந்திருந்தால், பாமகவிற்கு துணை முதல்வர் பதவியே கிடைத்திருக்கும். ஆனால், காலங்கடந்து இப்போது இணைந்துள்ளதால் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எந்தப் பயனும் இல்லை.

கடனாளிகளாக நிற்கின்றனர்

அய்யா ராமதாஸை மட்டுமே நம்பி, கடந்த காலங்களில் பல கோடி ரூபாயைச் செலவு செய்த நிர்வாகிகளை இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டனர். அன்புமணி ராமதாஸை முன்பு கடுமையாக விமர்சித்துவிட்டு, இப்போது திடீரென தலைமைக்கு கட்டுப்படுவதை ஏற்க முடியாமல் மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.

2 நாட்களில் முடிவு

பாமகவில் இரு அணிகளாகச் செயல்பட்டு வந்த சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் சமரசம் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கேள்விகளுக்கு விடை காணவே சேலத்தில் இந்த அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. "எங்களின் அடுத்தகட்ட அரசியல் முடிவு என்ன என்பதை இன்னும் 2 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று அருள் கூறியுள்ளதால், பாமகவில் பெரும் பிளவு ஏற்படுமா அல்லது சமரசம் ஏற்படுமா என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+