"என் வாழ்நாள் கடைசி வரைக்கும் இதை மறக்க மாட்டேன்!" -CM விஜய்க்கு உருக்கமாக நன்றி சொன்ன சாந்தனு... நெகிழ வைத்த பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது மகன் சாந்தனு வெளியிட்டுள்ள நன்றிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, தனது தந்தைக்கு அரசு மரியாதை அளித்து, நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்க்கு அவர் தெரிவித்த நன்றி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாக்யராஜ் மறைவு

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியரான பாக்யராஜ் திடீரென காலமானது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டபோது, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

Shanthanu K Bhagyaraj Vijay

முதல்வர் விஜய் அஞ்சலி

அந்த வரிசையில், தமிழ்நாடு முதல்வர் விஜய்யும் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், துக்கத்தில் உடைந்து நின்றிருந்த பூர்ணிமா, சாந்தனு மற்றும் குடும்பத்தினரிடம் சென்று ஆறுதல் கூறினார். முதல்வராக இருந்தாலும் எந்த அதிகார பந்தாவும் இல்லாமல், குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்ற அவரது செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

பின்னர் அரசு மரியாதையுடன் பாக்யராஜின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாந்தனு பதிவு

இந்த நிலையில், தனது எக்ஸ் (X) தளத்தில் சாந்தனு வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அவர் பதிவில், "முதல்வர் அவர்களே... உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247 வார்த்தைகளுக்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.

என் திருமணத்திற்கு தாலி எடுத்துத் தந்து என் மகிழ்ச்சித் திருநாளை தொடங்கி வைத்தீர்கள். அதற்கே இன்னும் நான் நன்றி சொல்லித் தீரவில்லை.

அதற்குள், என் வாழ்வின் மிகப் பெரிய துக்க நாளான என் தந்தையின் மறைவுக்கு ஆறுதல் சொல்ல நீங்கள் நேரில் வந்தீர்கள். பதவிக்குரிய அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பாசத்தோடு மண்டியிட்டு என் அம்மாவிடம் ஆறுதல் கூறியதை பார்த்து நான் நெகிழ்ந்து போனேன்.

நன்றி தெரிவித்த சாந்தனு

ஒரு கலைஞனுக்கு மரணத்திலும் அரசு மரியாதை கிடைப்பது மிகப்பெரிய பாக்கியம். என் தந்தையின் பெயருக்கு ஏற்ற கம்பீரமான அந்த மரியாதையை நீங்கள் அளித்ததை, என் இறுதி மூச்சு வரை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறு என்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி..." என்று மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனுவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. "மகனின் மனசு பேசுது", "தந்தைக்கு கிடைத்த மரியாதையை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று சொன்ன வார்த்தை கண்கலங்க வைக்கிறது", "இது ஒரு அரசியல் பதிவு இல்லை... ஒரு மகனின் நன்றியுணர்வு" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்யராஜின் மறைவுக்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, நயன்தாரா, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், சுஹாசினி, குஷ்பு, சுந்தர்.சி. உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொருவரும் பாக்யராஜுடன் தங்களுக்கு இருந்த நினைவுகளை பகிர்ந்தபோது, அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்ல, பலரின் வாழ்க்கையில் முக்கியமான மனிதராக இருந்தது தெரிந்தது.

அந்த வரிசையில், "என் தந்தைக்கு நீங்கள் அளித்த அந்த மரியாதையை என் இறுதி மூச்சு வரை மறக்க மாட்டேன்" என்று சாந்தனு எழுதிய ஒரு வரி, பாக்யராஜின் மறைவால் நொறுங்கி நிற்கும் குடும்பத்தின் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பதிவாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+