தா.பாண்டியன்தான் தடம் புரண்டு விட்டார் - கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி ஒன்றும் தடம் புரண்டுவிடவில்லை. அது ஓடிய தண்டவாளத்திலேதான் ஓடிக் கொண்டிருக்கிறது. தடம் புரண்டது இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், குறிப்பாக அதன் தலைவர் தா.பாண்டியனும்தான் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தடம் புரண்டுவிட்டது, திமுக ஆட்சி'' என்று தா.பாண்டியன் பேசி "ஜனசக்தி''யில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது.
"காஞ்சித்தலைவன்'' படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது வாதாபி படை வீரர்களுடன் போதை ஏற குடித்து விட்டு, பாடி ஆடுவது போல ஒரு காட்சி வரும்- அந்த காட்சிக்கு நான் எழுதிய பாட்டு வருமாறு:
"உலகம் சுத்துது எதனாலே? நம்ப உடம்பு சுத்துது அதனாலே?''
அந்தப்பாட்டில் வரும் வரிகளைப் போலவே; "தடம் புரண்டு விட்டவர்களுக்கு திமுக ஆட்சி தடம்புரண்டதாக தெரிகிறது''
தமிழகத்தில் திமுக ஆட்சி ஒன்றும் தடம் புரண்டுவிடவில்லை. அது ஓடிய தண்டவாளத்திலேதான் ஓடிக் கொண்டிருக்கிறது. தடம் புரண்டது இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், குறிப்பாக அதன் தலைவர் தா.பாண்டியனும்தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.
காங்கிரஸைகை ஜெ. அழைத்தாரே...
காங்கிரசுக்கு எதிராக நிலையெடுத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்த போது, தா.பாண்டியனுக்கு அதிமுக தடம் புரண்டுவிட்டதாக தோன்றவில்லை. மாநிலங்களவைக்கு திமுக ஆதரவோடு ஒரு உறுப்பினரை கடந்த பொதுத்தேர்தல் ஒப்பந்தம்படி பெற்றுக் கொண்ட போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கு திமுக ஆட்சி தடம்புரண்டு விட்டதாக தெரியவில்லை. திமுகவை பொறுத்தவரையில் அது எப்போதும் ஒரே தடத்தில்தான் போய்க் கொண்டிருக்கிறது. தா.பாண்டியன் செல்லும் தடம்தான் மாறி மாறி சென்று கொண்டிருக்கிறது.
கண்ணப்பன் விலகல்-வருத்தம்:
மதிமுகவில் இருந்து கண்ணப்பன் விலகப்போவதாக எனக்கு செய்தி வந்தது. ஆனால் அதற்கு காரணம் நான்தான் என்பது இன்றுதான் தெரிந்தது. மருத்துவமனையிலே இருந்த என்னை கண்ணப்பன் வந்து பார்த்ததுதான் முழு முதல் காரணம் என்பதை கேட்ட போது, அதற்கு நாம் காரணமாக இருந்து விட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டது. டெல்லியில் பிரதமருக்கு அறுவை சிகிச்சை என்றால், எதிர்கட்சித் தலைவர் அத்வானி நலம் விசாரிக்கிறார். வாஜ்பாய்க்கு உடல்நலம் சரியில்லை என்றால் சோனியாகாந்தி சென்று விசாரிக்கிறார்.
விரைவில் நலம் பெற வாழ்த்துகிறார். ஆனால் இங்குதான் உடல் நலக்குறைவாக உள்ளவனை சென்று பார்ப்பதே பாவம் என்று கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆர். கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது, நானும் பிரார்த்திக்கிறேன் என்று தொடர் கட்டுரை எழுதியவன் நான். ஆனால் ஒவ்வொருவரை பற்றியும் உலகம் புரிந்து கொள்ள இப்படிப்பட்ட சம்பவங்கள் உதவி செய்கின்றன.
நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கும்..
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரும்.... சேலத்தில் வைகோ செய்தி.
நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும் என்பார்கள். அதே சேலம் கூட்டத்தில் விடுதலைப்புலிகளால் இந்தியாவிற்கு எந்த காலத்திலும் ஆபத்து ஏற்படாது என்றும் அவர் பேசியிருக்கிறார்.
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த மேடையில் இந்த கருத்தை அவர் பேசியிருந்தால்- அதிமுக கூட்டணியில் அவர் இருப்பதே சந்தேகம் ஆகியிருக்கும். அந்த ஆபத்து வந்து விடும் என்பதால்தானே சேலத்திலே போய் இதை பேசியிருக்கிறார்.
நான் ஹிட்லரா...?:
கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் தமிழக முதல்வர் கலைஞர் நவீன ஹிட்லராகிவிட்டார்- வைகோ சேலம் பேச்சு
ராஜீவ்காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்று பேசியவர் கொளத்தூர் மணி. அவர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசவில்லை என்கிறார் வைகோ.
பொடா சட்டத்தில் அதிமுக ஆட்சியிலே இவரைப் பிடித்து சிறையிலே ஜெயலலிதா அடைத்திருந்த போது, சிறைவாசலிலும், நீதிமன்ற வாசலிலும் காத்திருந்து ஜாமீனில் வெளியே வரும்படி கேட்டுக் கொண்ட நான் இவருக்கு ஹிட்லர்.
ஜெ. மகாத்மாவா...?:
ஆனால் இவரைப்பிடித்து சிறையிலே போட்டவர் இவருக்கு இப்போது மகாத்மா காந்தியாக தெரிகிறார்!
2002ம் ஆண்டு சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அரசு பிரபாகரனை கைது செய்து; இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து ஆவேசமாக பேசியது இன்னமும் எல்லோருடைய செவிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
காதில் பஞ்சை வைத்து அடைத்திருப்பவர்களுக்கு (வைகோ) அந்த ஒலி எப்படி கேட்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ்












Click it and Unblock the Notifications