வேலூரில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்!
வேலூர்: வேலூரில் நீதி மன்றத்திற்கு சென்ற திமுக வழக்கறிஞர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி வேலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்றும் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
இந்த நிலையில் திமுக வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்திற்கு சென்றனர். அப்போது, அவர்களுடன் வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்களும் உடன் சென்றனர்.
அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. பின்பு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
தங்களுடன் வழக்கு தொடர்பாக வந்த சுந்தரமூர்த்தி என்பவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மோகன் குமார், கார்த்திகேயன் ஆகியோர் தாக்கியதாக மாவட்ட முதன்மை நீதிபதி கலைராசனிடம் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் பொன் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது.
அதில் திமுக வழக்கறிஞர்கள் முகமதுசகி, அக்பர் பாஷா, பார்த்திபன், அரசு வழக்கறிஞர்கள் பாண்டியன், ரவிக்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞர் பார்த்திபன், எம்.ஸ்ரீதர், ரவிச்சந்திரன், கே.சம்பத், கே.மணி, நடன சிகாமணி ஆகிய திமுக வழக்கறிஞர்களை வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நீக்குவதாக பொன் தேவராஜன் அறிவித்தார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications