வக்கீல்களுக்கு இழப்பீடு: உயர்நீதிமன்றத்தில் அரசு ரூ. 25 லட்சம் டெபாசிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்தில் ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்ட வக்கீல்களுக்கு இழப்பீடு தருவதற்காக தமிழக அரசு ரூ. 25 லட்சம் பணத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த பெரும் மோதலில் போலீஸாரும், வக்கீல்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த வாகனங்கள், உயர்நீதிமன்ற சொத்துக்களுக்கான சேதம் உள்ளிட்டவற்றுக்கான இழப்பீடு வழங்குவதற்காக தமிழக அரசு தற்போது உயர்நீதிமன்றத்தில் ரூ. 25 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவுக்கேற்ப இந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

எனவே தாக்குதலில் தங்களது வாகனங்கள் சேதமடைந்திருந்தால் அதற்குரியவர்கள், உரிய சான்றுகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை உயர்நீதிமன்றப் பதிவாளர் விஜயன், சிறு வழக்குகளுக்கான கோர்ட்டின் தலைமை நீதிபதி, சென்னை செஷன்ஸ் நீதிபதி ஆகியோரிடம் வருகிற 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+