போலி விசா-சரவண பவன் ஊழியர் கைது: 'அண்ணாச்சி' மகனுக்கு வலைவீச்சு
சென்னை: போலி விசாவுடன் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன் ஊழியர் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமார் தலைமறைவாகி விட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடக்கம் பட்டி, வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். இவரை சரவண பவன் நிறுவனத்தினர் போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர்.
அதன்படி மார்ச் 8ம் தேதி கோகுலகண்ணன், அமெரிக்காவுக்குக் கிளம்பினார். ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கி இன்னொரு விமானத்தைப் பிடித்து அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஹாங்காங்கில் அவர் இறங்கியவுடன் அவரது ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்தது போலி விசா எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 2 நாட்கள் அங்கு வைத்திருந்து கண்ணனை அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரை சென்னைக்கு நாடு கடத்தினர். வியாழக்கிழமை காலை ஆறே முக்கால் மணிக்கு அவர் சென்னை வந்து சேர்ந்தார். வந்ததும் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து கண்ணனிடம் நடந்த விசாரணையின்போது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமாருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிவக்குமாரை போலீஸார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். இதனால் சிவக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுதான் சிக்கினார்...
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் சிவக்குமார், நான்கு சரவண பவன் ஊழியர்களுக்காக போலி விசாக்கள் பெற முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் பெரும் சிக்கலில் சிவக்குமார் மாட்டியுள்ளார்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications