2009-உலக பொருளாதாரத்துக்கு போதாத காலம்!
லண்டன்: 2009-ம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்துக்கு பேராபத்தான ('a very dangerous year') ஆண்டாக இருக்கும் என்கிறது உலக வங்கி.
இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜியோல்லிக் நேற்று கூறுகையில், 'இந்த ஆண்டைப் போல ஒரு மோசமான ஆண்டை இதுவரை பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு 2009-ம் ஆண்டு இருக்கப் போகிறது. இந்த நிலையை மாற்ற ஜி 20 நாடுகள் ஐஎம்எப்புக்கு கூடுதல் நிதியை அளிக்க வேண்டும். அதற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியுள்ளன. இந்த மோசமான சூழலிலும் இது ஒரு ஆறுதலாகவே தெரிகிறது", என்றார்.
ஜி 20 அமைப்பில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற ஏழு பலம் மிக்க நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊக்கச் சலுகைகள் அளிப்பதா இல்லையா என்பது குறித்து சமீபத்தில் இந்நாடுகளின் நிதித் துறை அமைச்சர்கள் கூடி விவாதித்தனர். இதில் பலர் நிதிச் சலுகை அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்றும் ஜி-20 நிதி அமைச்சர்களின் கூட்டம் நடக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையிலேயே ஏப்ரல் 2-ம் தேதி நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இந்தக் கூட்டத்தின் முடிவுதான் உலகப் பொருளாதாரத்தின் மோசமான சரிவை ஓரளவாவது தடுக்கும் சக்தி மிக்கது என்று உலக வங்கித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications