மக்களவை தொகுதி அறிமுகம்-20: கோவை

தமிழகத்தில் இதுவரை அதிமுக வெற்றி பெறாத தொகுதிகளி்ல் ஒன்று கோயம்பத்தூர்.
காங்கிரஸ் கட்சிக்குத்தான் இங்கு அதிக முறை (5) வெற்றி கிடைத்துள்ளது. அக்கட்சியின் சி.கே.குப்புசாமி இங்கு மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.
அவரது உறவினரான சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் இருமுறை இத்தொகுதியின் எம்.பி ஆகியுள்ளார்.
காங்கிரஸுக்கு அடுத்து இத்தொகுதியை அதிக முறை வென்ற கட்சி சிபிஐ. இக்கட்சிக்கு இங்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. தற்போதைய எம்.பி. சுப்பராயனும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்தான்.
மற்றபடி திமுகவுக்கு இரு முறையும், சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு முறையும் கோவை மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதிமுகவுக்கு இதுவரை இங்கு வெற்றிக் கனியை சுவைக்கும் வாய்ப்பை மக்கள் தரவில்லை.
தொகுதி மறு சீரமைப்பின் கீழ் கோவை தொகுதியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தொகுதியின் கீழ் இருந்த முன்னாள் சட்டசபைத் தொகுதிகள் - சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர்.
இதில் பேரூர், திருப்பூர் ஆகியவை தற்போது இல்லை. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ட்டசபைத் தொகுதிகள் ஆகும்.
தற்போது உள்ள புதிய சட்டசபை தொகுதிகள் - பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை, தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதி. எனவே இத்தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்குமாறு ஒவ்வொரு முறையும் கேட்பது வழக்கம்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை எம்.பி தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் பெரும்பாலானவற்றை அதிமுகவே வென்றது.
பல்லடம், சிங்காநல்லூர், பேரூர், கோவை மேற்கு ஆகிய தொகுதிகளை அதிமுக வென்றது. கோவை கிழக்கை திமுகவும், திருப்பூரை மார்க்சிஸ்ட் கட்சியும் வென்றன.
கோவை தொகுதி (பழையது) சட்டசபை உறுப்பினர்கள்..
சிங்காநல்லூர் - சின்னச்சாமி (அதிமு)
கோவை மேற்கு - தா.மலரவன் (அதிமுக)
கோவை கிழக்கு - பொங்கலூர் பழனிச்சாமி (திமுக)
பல்லடம் - செ.ம. வேலுச்சாமி (அதிமுக)
பேரூர் - எஸ்.பி. வேலுமணி (அதிமுக)
கடந்த தேர்தல் நிலவரம்
கே.சுப்பராயன் (சிபிஐ) - 5,04,981.
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 3,40,476.
வெற்றி வித்தியாசம் - 1,64,505 வாக்குகள்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1952-57 - ராமலிங்க செட்டியார் - காங்கிரஸ்.
1957-62 - பார்வதி கிருஷ்ணன் - சிபிஐ
1962-67 - ராமகிருஷ்ணன் - காங்கிரஸ்.
1967-71- கே.ரமணி - சிபிஎம்.
1971-77 - பார்வதி கிருஷ்ணன் - சிபிஐ.
1977-80 - பார்வதி கிருஷ்ணன் - சிபிஐ.
1980-84 - இரா.மோகன் - திமுக.
1984-89 - சி.கே.குப்புசாமி - காங்கிரஸ்.
1989-91 - சி.கே.குப்புசாமி - காங்கிரஸ்.
1991-96 - சி.கே.குப்புசாமி - காங்கிரஸ்.
1996-98 - ராமநாதன் - திமுக.
1998-99 - சி.பி. ராதாகிருஷ்ணன் - பாஜக.
1999-04 - சி.பி. ராதாகிருஷ்ணன் - பாஜக.
2004- கே.சுப்பராயன் - சிபிஐ.
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1952
வென்றவர் - ராமலிங்க செட்டியார் (காங்கிரஸ்).
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications