செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்க 10 புதிய பெட்டிகள் நெல்லை வருகை
நெல்லை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படுவதற்காக புதிதாக 10 ரயில் பெட்டிகள் நெல்லை வந்துள்ளன.
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த மாதம் 8ம் தேதி அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் இயக்கி வைத்தார்.
வாரத்திற்கு ஒருமுறை வியாழக்கிழமை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், நெல்லை வழியாக சென்னை வரை சென்று மறுநாள் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சனிக்கிழமை அங்கிருந்து திரும்பி வருகிறது.
இந்த வாராந்திர எஸ்க்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களி்ன் கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வாரத்தில் 5 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் திருச்செந்தூர் சென்னை வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்தில் 5 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைக்க நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று மாலை 10 புதிய ரயில் பெட்டிகள் வந்தன. இன்னும் சில நாட்களில் மேலும் 20 புதிய பெட்டிகள் வர இருக்கிறது.
வரும் 19ம் தேதி முதல் திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications