சேலம் ரயில் கோட்ட அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு
சேலம்: சேலத்தில் உள்ள கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். விடிய விடிய சோதனை நடந்தது.
அலுவலகத்தி்ல் உள்ள நிதிப் பிரிவில் இந்த ரெய்டு நடந்தது. சேலம் சந்திப்பு ரயில் நிலையம் அருகேதான் கோட்ட ரயில்வே அலுவலகம் உள்ளது.
சேலம் கோட்டம் தொடர்பான அனைத்து பிரிவுகளும் இங்கு இயங்கி வருகின்றன. ரயில்வே கட்டிடங்கள் கட்டுதல், ரயில் பாதை சீரமைத்தல் உள்பட கான்டிராக்டர்கள் மூலமாக நிறைவேற்றப்படும் பணிகளுக்கு இங்குள்ள நிதி மற்றும் கணக்கு பிரிவில் இருந்து பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால் இப்பிரிவு எந்நேரமும் பரபரப்பாக இருக்கும்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பணி முடிந்து பணியாளர்கள் சென்றுவிட்டனர். நிதி மற்றும் கணக்குப் பிரிவு மட்டும் இயங்கி வந்தது. 6.30 மணிக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக நிதி பிரிவுக்கு சென்றனர்.
ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை எடுத்து விசாரணை நடத்தினர். பணி முடிந்தும் பில் தொகையை பாஸ் செய்யப்படாமல் நிறுத்தி வைத்தது தொடர்பாக விசாரித்தனர். கோட்ட நிதி மேலாளர் செந்தமிழ் செல்வன் அறையிலும் சோதனை நடத்தினர்.
நள்ளிரவுக்கு பிறகும் சோதனை தொடர்ந்து நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கான்டிராக்டர்களுக்கு பில் பாஸ் செய்ய நிதி பிரிவினர் கமிஷன் கேட்பதாகவும் கமிஷன் வராவிட்டால் பில்லை நிறுத்தி வைப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்தே சிபிஐ ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது.
ரெய்டு காரணமாக சேலம் ரயில்வே கோட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications