மக்களவை தொகுதி அறிமுகம்-22: திண்டுக்கல்

Subscribe to Oneindia Tamil

Dindigul
திண்டுக்கல்: தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக கோட்டைகளில் இந்த கோட்டை நகரமான திண்டுக்கல்.

1952ம் ஆண்டு இங்கு முதல் லோக்சபா தேர்தல் நடந்தது. அன்று முதல் இதுவரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 6 முறை வெற்றி பெற்றுள்ளது அதிமுக.

தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதி திண்டுக்கல். பல அரசியல் திருப்பங்களுக்கும் காரணமான தொகுதி இது. அதிமுகவுக்கு முதன் முதலில் அங்கீகாரம் கொடுத்த தொகுதியும் இதுதான்.

அதிமுக தொடங்கப்பட்ட பின்னர் இங்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதிமுகவின் புதிய அத்தியாயம் தொடங்கக் காரணமாக இருந்ததும் திண்டுக்கல்தான்.

அதிமுகவுக்குத் திருப்புமுனையைக் கொடுத்த மாயத்தேவர் இருமுறை திமுக சார்பாகவும், ஒரு முறை அதிமுக சார்பாகவும் வெற்றி பெற்றவர்.

இத்தொகுதியில் அதிக முறை வென்ற பெருமைக்குரியவர் அதிமுகவைச் சேர்ந்த சி.சீனிவாசன். மொத்தம் நான்கு முறை இத்தொகுதியின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சீனிவாசன்.

திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் கடந்த முறை இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகளில் தற்போது திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகியவை நீக்கப்பட்டு விட்டன.

பழைய சட்டசபைத் தொகுதிகள் - திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர்.

புதிய சட்டசபைத் தொகுதிகள் - பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல்.

திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளின் (பழைய மற்றும் புதிய) உறுப்பினர்கள் விவரம்..

திருமங்கலம் - வீர இளவரசன் (மதிமுக) (மறைவு)- தற்போதைய எம்.எல்.ஏ லதா அதியமான் (திமுக)
உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன் (அதிமுக)
நிலக்கோட்டை (தனி)- தேன்மொழி (அதிமுக)
சோழவந்தான் - மூர்த்தி (திமுக)
திண்டுக்கல் - பாலபாரதி (சிபிஎம்)
ஆத்தூர் - ஐ.பெரியசாமி (திமுக)
பழனி - அன்பழகன் (திமுக)
ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி (திமுக)
நத்தம் - விஸ்வநாதன் (அதிமுக)

கடந்த தேர்தல் நிலவரம் ..

என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்) - 4,07,116.
ஜெயராமன் (அதிமுக) - 2,51,945.
வெற்றி வித்தியாசம் - 1,55,171 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள் ..

1952-57 - அம்மு சுவாமிநாதன் (காங்கிரஸ்)
1957-62 - குலாம் முஹைதீன் (காங்கிரஸ்)
1962-67 - டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன் (காங்கிரஸ்)
1967-71 - அன்புச்செழியன் (திமுக)
1971-77 - மாயத்தேவர் (திமுக)
1977-80 - மாயத்தேவர் (அதிமுக)
1980-84 - மாயத்தேவர் (திமுக)
1984-89 - கே.ஆர்.நடராஜன் (அதிமுக)
1989-91 - சி.சீனிவாசன் (அதிமுக)
1991-96 - சி.சீனிவாசன் (அதிமுக)
1996-98 - என்.எஸ்.வி.சித்தன் (அதிமுக)
1998-99 - சி.சீனிவாசன் (அதிமுக)
1999-04 - சி.சீனிவாசன் (அதிமுக)
2004 - என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்)

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1952.
வென்றவர் - அம்மு சுவாமிநாதன் (காங்.)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+