ஏர்செல்: ரூ.25,000 கோடி புதிய முதலீடு!
பிரபல செல்போன் நிறுவனமான ஏர்செல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 25 ஆயிரம் கோடியை விரிவாக்கத் திட்டத்துக்காக முதலீடு செய்ய உள்ளது.
ஹைதராபாதில் ஏர்செல்லின் ஜிஎஸ்எம் மொபைல் சேவையைத் தொடங்கிவைத்த அதன் தலைவர் குல்தீப் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஏர்செல் நிறுவனம் நடப்பு ஆண்டில் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 1.7 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
டெல்லி, உத்தரப் பிரதேசம், மும்பை ஆகிய பகுதிகளுக்கும் விரைவில் ஏர்செல் ஜிஎஸ்எம் சேவை விரிவுபடுத்தப்படும். இம்மாத இறுதிக்குள் அந்தப் பணிகள் முடிந்துவிடும்.
வரும் ஏப்ரல் மாதத்துக்குள் ஏர்செல் செயல்பாடு வட்டாரங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்த்தப்படும். 13-வது நகரமாக ஹைதராபாதில் தற்போது ஜிஎஸ்எம் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் மட்டும் ஏர்செல் நிறுவனம் ரூ. 1,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் ரூ. 500 கோடியும், அடுத்து டிசம்பருக்குள் ரூ. 500 கோடியும் முதலீடு செய்யப்படும் என்றார் குல்தீப் சிங்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications