மக்களவை தொகுதி அறிமுகம்-25: பெரம்பலூர்

பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியாபுரம் (தனி), வரகூர்(தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.
தற்போது தொகுதி மறு சீரமைப்புக்கு பின்பு குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. அதே போன்று திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் தொகுதியின் தற்போதைய எம்.பியான ராஜா மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட தொகுதிகளில் ஒன்று பெரம்பலூர். இத்தொகுதியின் சட்டசபைத் (பழைய, புதிய) தொகுதிகளைப் பொறுத்தமட்டில்,
பெரம்பலூர் (தனி) தொகுதியில் திமுகவின் ராஜ்குமார், உப்பிலியாபுரம் (தனி) தொகுதியில் திமுகவின் ராணி, வரகூர்(தனி) தொகுதியில் அதிமுகவின் சந்திரகாசி, அரியலூர் தொகுதியில், அமரமூர்த்தி, ஆண்டிமடத்தில், சிவசங்கர், ஜெயங்கொண்டத்தில் அதிமுகவின் ராஜேந்திரன், குளித்தலையில் திமுகவின் மாணிக்கம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த தேர்தல் நிலவரம்
ஏ.ராஜா - திமுக - 3,89,708
டாக்டர் எம்.சுந்தரம் - அதிமுக - 2,36,375
வெற்றி வித்தியாசம் - 1,53,333 வாக்குகள்.
இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்
1951 - பூரரங்கசாமி படையாச்சி - டிஎன்டி
1957 - பழனியாண்டி -காங்.
1962 - இரா.செழியன் - திமுக
1967 - துரையரசு - திமுக
1971 - துரையரசு - திமுக
1977 - அசோக்ராஜ் - அதிமுக
1980 - கே.பி.எஸ். மணி- காங்.
1984 - எஸ்.தங்கராசு - அதிமுக
1989 - அசோக்ராஜ் - அதிமுக
1991 - அசோக்ராஜ் - அதிமுக
1996 - ராஜா - திமுக
1998 - கபி. ராஜரத்தினம் - அதிமுக
1999 - ராஜா - திமுக
2004 - ராஜா - திமுக-
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951
வென்றவர் - பூரரங்கசாமி படையாச்சி (டிஎன்டி)
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications