பாமகவும் திமுக கூட்டணிக்கு வரும்-திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்தான் நீடிக்கும் என முதல்வர் கருணாநிதி நேற்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும் அவர்களது லட்சியத்தையும், பணியையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் பற்றி கூறியுள்ள கருத்து எமக்கு பெருமகிழ்வையும், பெருமையையும் அளிக்கிறது.
தேர்தல் கூட்டணி என்கிற அளவில் இல்லாமல், கொள்கை அளவில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகளுக்குள்ள நட்புறவை, தோழமையைச் சுட்டிக்காட்டியிருப்பது எம்மை மென்மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
அம்பேத்கார், பெரியார் ஆகிய மகத்தான தலைவர்களின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகவும், ஒட்டுமொத்த தமிழினத்தின் நலன்களுக்காகவும் போராடி வரும் எம்மை அரசியல் அரங்கில் அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் அறிவிப்பு பேருவகையளிக்கிறது.
சாதி ஒழிப்பு, சமத்துவம், பொதுவுடமை மற்றும் ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் தமிழினத்தின் நலன்களுக்கான களங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என மகிழ்வுடன் உறுதியளிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
உள்ளாட்சித் தேர்தலில் இருந்து நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். இதை முதல்வர் கருணாநிதி உறுதி செய்துள்ளார். தேர்தல் கூட்டணியில் மட்டுமில்லாமல் சமத்துவம், சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகளிலும், திமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஒரே கொள்கைதான் என்று முதல்வர் கூறியிருப்பது எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கவே இன்று வந்தேன் என்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: திமுக கூட்டணியில் பாமக இணையுமா?
பதில்: விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் அணியில் பாமகவும் இருக்கும் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே பாமகவும் இந்த கூட்டணியில் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.
கேள்வி: காங்கிரசுக்கும் உங்கள் கட்சிக்கும் மோதல் இருக்கிறதே?
பதில்: இதற்கு முதல்வர் ஏற்கனவே பதில் சொல்லி விட்டார்.
கேள்வி: சிதம்பரம் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவது உறுதியா?
பதில்: எங்கள் கட்சியின் தலைமை செயற்குழு நான் அங்கு போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதுபற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications