சத்யம் நிறுவனத்திலிருந்து 1 மாதத்தில் 3500 பணியாளர் விலகல்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்திலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3500 பணியாளர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வேறு வேலைக்குத் தாவியுள்ளனர்.
சத்யம் நிறுவனத்தில் 47570 பணியாளர்கள் இருந்தனர், ராமலிங்க ராஜு தனது மோசடிகளை ஒப்புக் கொண்டு பதவி விலகிய போது. அப்போதே கிட்டத்தட்ட 20 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடவில்லை. மேலும் தடுமாற்றத்திலிருந்தாலும், சம்பளம் மட்டும் சரியாகக் கிடைத்ததால், வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் சத்யம் நிறுவனத்தில் பலர் தங்கிவிட்டனர். மேலும் சத்யம் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் பணியாளர்களை வெளியில் போகவேண்டாம் என கேட்டுக் கொண்டது.
இதையும் மீறி கடந்த 1 மாதத்தில் மட்டும் 3500 பணியாளர்கள் வேறு நிறுவனங்களுக்குத் தாவிவிட்டனர். இப்போதைய கணக்கெடுப்பின்படி, சத்யம் பணியாளர் எண்ணிக்கை 44130 ஆகும்.
"முன்பெல்லாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது வாய்ப்புகள் வந்தவண்ணமிருந்தன. ஆனால் இப்போதோ, மாதக்கணக்கில் ஆகிறது புதிய வாய்ப்பு கிடைக்க. அப்படிக் கிடைத்துப் போனவர்கள்தான் இந்த 3500 பேரும். வாய்ப்பில்லாதவர்கள், நல்ல வாய்ப்பு வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.." என்கிறார் சமீபத்தில் வெளியேறிய ஒரு முன்னாள் சத்யம் பணியாளர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications