பீகாரில் காங்.குக்கு 3 சீட்தான்-லாலு கட்சிக்கு 25, பாஸ்வானுக்கு 12
டெல்லி: பீகார் மாநிலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்களை மட்டுமே லாலு பிரசாத் யாதவ் ஒதுக்கியுள்ளார்.
பீகார் மாநில ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருந்து வந்தது. பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி கூடுதல் சீட்களைக் கேட்டு வந்ததே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் இன்று தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்தது. இதை ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பாஸ்வானும் இன்று டெல்லியில் கூட்டாக அறிவித்தனர்.
அதன்படி, லாலு பிரசாத்தின் கட்சி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 25 இடங்களில் போட்டியிடும். பாஸ்வான் கட்சிக்கு 12 சீட்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 3 சீட் மட்டுமே கிடைத்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டது. லாலு கட்சி 26 சீட்களிலும், லோக் ஜனசக்தி 8 சீட்களிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை லாலு கட்சி ஒரு தொகுதி குறைவாகவும், காங்கிரஸ் ஒரு தொகுதி குறைவாகவும் போட்டியிடுகின்றன. ஆனால் பாஸ்வானுக்கு கூடுதலாக நான்கு சீட்கள் கிடைத்துள்ளன.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications