கர்நாடகத்திலிருந்து பிரச்சாரம் துவக்கும் சோனியா
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தொடங்குகிறார்.
தாவணகெரேயில் 23ம் தேதி அவரது முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கட்சியின் தேர்தல் தேர்தல் அறிக்கை 26ம் தேதி வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே பெங்களூர் மத்திய தொகுதி அல்லது தெற்குத் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள அவர் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவி்ட்டார்.
இதனால் இதில் ஏதாவது ஒரு தொகுதியில் கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவரான ஜாபர் ஷெரீப் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
இந் நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்பியான அம்பரீஷை இழுக்க பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
சுக்லா-ஜோகிக்கு காங். சீட் மறுப்பு:
இதற்கிடையே சட்டீஸ்கர் மாநிலத்தில் போட்டியிட அம் மாநில முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகிக்கும், மூத்த தலைவர் வி.சி. சுத்லாவுக்கும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு தர மறுத்துவிட்டது.
11 தொகுதிகள் கொண்ட இம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் அஜித் ஜோகி, வி.சி.சுக்லா ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
தனது மகன் அமித் ஜோகிக்கு சீட் பெற அஜித் ஜோகி தீவிர முயற்சி செய்தார். ஆனால்ஸ அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இத்தனைக்கும் வி.சி.சுக்லா மஹாசமுத் தொகுதியில் 9 தடவை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 10வது முறையாக போட்டியிட அவர் திட்டமிட்டிருந்த நிலையில் கட்சி அவருக்கு சீட் தரவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications