மக்களவை தொகுதி அறிமுகம்-27: சிதம்பரம் (தனி)

சிதம்பரத்தில் இருந்த பழைய சட்டசபைத் தொகுதிகள் - குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி).
தற்போது உள்ள புதிய தொகுதிகள் - குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி).
ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்த தொகுதி சிதம்பரம். தற்போது பாமக வசம் கடந்த 3 தேர்தல்களாக இருந்து வருகிறது. பாமக சார்பில் இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னுச்சாமி ஒரு முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார்.
அதேபோல தலித் எழுமலையும் இங்கு பாமக சார்பில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில், புவனகிரியில் அதிமுகவின் செல்வி ராமஜெயமும், ஜெயங்கொண்டத்தில் அதிமுகவின் ராஜேந்திரனும், காட்டுமன்னார் கோவிலி்ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும், மங்களூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செல்வமும், சிதம்பரத்தில் அதிமுகவின் அருண்மொழித் தேவனும் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒரே ஒரு முறை வென்றுள்ளது.
கடந்த தேர்தல் நிலவரம்
இ.பொன்னுச்சாமி (பாமக) - 3,43,424
திருமாவளவன் (ஐக்கிய ஜனதாதளம்) 2,55,773
பெரியசாமி (பாஜக)-1,13,974
வெற்றி வித்தியாசம் - 87,651 வாக்குகள்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1957 - கனகசபை பிள்ளை - காங்கிரஸ்.
1957 - இளையபெருமாள் - காங்கிரஸ்.
1962 - கனகசபை பிள்ளை - காங்கிரஸ்.
1967 - மாயவன் - திமுக.
1971 - மாயவன் - திமுக
1977 - முருகேசன் - அதிமுக.
1980 - பி.குழந்தைவேலு - திமுக
1984 - வள்ளல்பெருமான் - காங்கிரஸ்
1989 - வள்ளல்பெருமான் - காங்கிரஸ்
1991 - வள்ளல்பெருமான் - காங்கிரஸ்
1996 - வி.கணேசன் - திமுக
1998 - ஆர். எழுமலை - பாமக
1999 - இ.பொன்னுச்சாமி - பாமக
2004 - இ.பொன்னுச்சாமி - பாமக
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1957.
வென்றவர் - கனகசபை பிள்ளை (காங்கிரஸ்).
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications