அரியலூர் ஜல்லிக்கட்டு: இருவர் பலி-65 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமணவூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் முட்டி இருவர் பரிதாமாக பலியாயினர். 65 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொணடனர். இந்நிகழ்ச்சியில் காளை முட்டியதில் சிறுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (38), நன்னி உட்பட சுமார் 67 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நன்னி என்பவர் மரணமடைந்தார். கணேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டில் லேசான காயமடைந்தவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகள் முட்டி இருவர் பலியான சம்பவம் குறித்து அரியலூர் போலீடார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications