மக்களவை தொகுதி அறிமுகம்-28: மயிலாடுதுறை

மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் முன்பு
கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.
தொகுதி மறு சீரமைப்புக்கு பின்பு கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி , பூம்புகார், பாபநாசம் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபாநாசம் ஆகிய சட்டசபை தொகுதிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.
அதே போன்று, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகள் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளன.
தொகுதி மறு சீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை காங்கிரஸ் கோட்டைகளில் ஒன்று. காங்கிரஸ் கட்சி இங்கு அதிக அளவாக 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.
இத்தொகுதியின் தற்போதைய எம்.பியான மணிசங்கர அய்யர், மத்திய அமைச்சராக உள்ளார்.
கடந்த தேர்தல் நிலவரம்
மணிசங்கர அய்யர் (காங்கிரஸ்) - 4,11,160
ஓ.எஸ்.மணியன் (அதிமுக) - 2,15,469
வெற்றி வித்தியாசம் - 1,95,691 வாக்குகள்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1980 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரஸ்
1984 - பக்கீர் முகம்மது - காங்கிரஸ்
1989 - பக்கீர் முகம்மது - காங்கிரஸ்
1991 - மணிசங்கர் அய்யர் - காங்கிரஸ்
1996 - சி.வி.ராஜேந்திரன் - காங்கிரஸ்
1998 - கிருஷ்ணமூர்த்தி - காங்கிரஸ்
1999 - மணிசங்கர் அய்யர் - காங்கிரஸ்
2004 - மணிசங்கர் அய்யர் - காங்கிரஸ்
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications