பாளை காவல் நிலையத்தில் திடீர் தீ
நெல்லை: பாளை காவல் நிலையம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ பற்றி கொண்டது. தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியில் தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளை காவல் நிலையம் முன்பாக தலைமை போஸ்ட் ஆபிஸ் சுவரை ஓட்டியுள்ள பகுதியில் வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சில வாகனங்களை போலீசார் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன், பாளை நிலைய அலுவலர் அகமது அலி, தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைவில் வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு கார்கள், மற்றும் ஒரு லாரியி்ன் டயர் தீப்பிடித்து சேதமடைந்ததாக தீயணைப்பு துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வேண்டுமென்றே வாகனங்களுக்கு தீ வைத்தார்களா, அப்பகுதியில் புதரி்ல் அணைக்காமல் போட்ட பீடித்துண்டால் தீ பரவி வாகனங்கள் எரிந்ததா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications