கடந்த முறையை விட கூடுதலாக சீட் கேட்கும் மதிமுக

கடந்த லோக்சபா தேர்தலில் மதிமுக, திமுக கூட்டணியில் இடம் பெற்று 4 இடங்களில் போட்டியிட்டது. தற்போது அதிமுக கூட்டணிக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுத் தலைவர் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் முன்னேற்றகரமான போக்கோடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிடவேண்டும் என்ற உணர்வு எல்லா கட்சிகளுக்கும் இருக்கும், அதுபோல ம.தி.மு.க.வும் கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட கூடுதல் இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு உள்ளது என்றார் துரைசாமி.
பாமக வருமா .. வைகோ விளக்கம்
இதற்கிடையே, நேற்று மதிமுக அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக கூட்டணிக்கு பாமக வருமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு வைகோ, இது குறித்து இப்போது கூறமுடியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகவும், விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications