ரூ.91 கோடி வரி செலுத்திய ஐபிஎல்!

ஐபிஎல் வீரர்கள், அம்பையர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் கோச்சுகளுக்கு தரப்பட்ட சம்பளத்தில் வரியாகப் பிடிக்கப்பட்டதே இந்தத் தொகை.
ஆரம்பத்தில் இந்த அளவு வரியை செலுத்தவில்லை ஐபிஎல். இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வருமான வரித்துறை அலுவலகம் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. இதில், வீரர்கள் மற்றும் இதர பொறுப்பில் உள்ளவர்களுக்கு முழுமையாகவும் ஒரே மாதிரியாகவும் வரி பிடித்தம் செய்வதில்லை என புகார் கூறியிருந்தது.
முதல் 6 மாதத்தில் பிசிசிஐ செலுத்திய ரூ.670 கோடிக்கு வரியாக ரூ.65 கோடி செலுத்தப்பட்டது. தற்போது ரூ.91 கோடியை ஐபிஎல் வரியாகச் செலுத்தியுள்ளது. மேலும் விளையாட்டுடன் தொடர்புடைய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் அல்லது கோச்சுகள் யாராக இருந்தாலும் அவர்கள் இனி தொழில்முறை ஊழியர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு எந்த வித வரிச்சலுகையும் கிடையாது என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதனால் 10 சதவிகிதம் வரை வரி பிடித்தம் செய்யத் துவங்கியது பிசிசிஐ. அப்படி வசூலிக்கப்பட்ட தொகைதான் இந்த 91 கோடி ரூபாய்.
இதில் ஐபிஎல் மட்டும் கூடுதலாக சேவை வரியும் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மற்ற விளையாட்டுக்களைப் போல அல்லாமல், முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் நடத்தப்படுவதால் ஐபிஎல் சேவை வரி செலுத்தியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு எந்த விளையாட்டுக்களுக்கு சேவை வரி விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications