பொது சின்னம்-செயல்படாத கட்சிகளை நாடும் சிரஞ்சீவி

Subscribe to Oneindia Tamil

Chiranjeevi
ஹைதராபாத்: பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு பொது சின்னம் பெற செயல்படாத சில கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார் அக் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி.

பிரஜா ராஜ்யம் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு அவரது கட்சி தள்ளப்பட்டது. இதனால் அவரது வேட்பாளர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படும் நிலை உருவானது.

ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கும் பிரஜா ராஜ்ஜியம், பொது சின்னம் இல்லாவிட்டால் மக்கள் மனதில் இடம் பெறுவது கடினம் என்பதால் வேறு ஏதாவது ஒரு மாநில கட்சியின் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

இதையடு்த்து செயல்படாமல் உள்ள சில கட்சிகளுடன் சிரஞ்சீவி பேச்சு நடத்தி வருகிறார். அந்த சின்னத்தில் பிரஜா ராஜ்ஜியம் போட்டியிட வேண்டுமானால் முதலில் அந்தக் கட்சி பிரஜா ராஜ்ஜியத்தில் இணைய வேண்டும். இதனால் அதற்குத் தயாராக உள்ள கட்சிகளுடன் சிரஞ்சீவி பேசி வருகிறார்.

அவரது கட்சியின் சார்பில் முன்னாள் சிக்கிம் மாநில ஆளுநர் சிவசங்கர், மிசோரம் மாநிலத்தில் உள்ள மிசோரம் நேஷனஸ்ட் கட்சியுடன் பேச்சு நடத்தியுள்ளார். அதே போல மேலும் சில கட்சிகளுடனும் சிரஞ்சீவி தரப்பு பேச்சு நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+