ஒரே நேரத்தில் எம்பி-எம்எல்ஏ தேர்தலில் சிபு சோரன் போட்டி

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் தலைவரான சிபு சோரன் மத்திய நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார்.
ஒரு கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பின் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேல் முறையீட்டை தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கேட்டார். ஆனால், அவருக்கு பதவி தர மறுத்துவிட்டார் சோனியா.
இந் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது கட்சியின் முதல்வரை பதவி விலகச் செய்துவி தானே முதல்வரானார் சிபு. முதல்வராக நீடிக்க அங்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், படுகேவலமாகத் தோற்றார். அத்தோடு முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந் நிலையி்ல் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மொத்தமுள்ள 12 தொகுதிகளில் 5 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், 7 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.
இதில் சோரன் தும்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் மீண்டும் முதல்வராகும் முயற்சியாக ஜமாதாரா சட்டசபைத் தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலிலும் போட்டியிடுகிறார். பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விஷ்ணு பையா என்ற எம்எல்ஏ ராஜினாமா செய்தததால் இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது.
சட்டசபை இடைத் தேர்தலில் வென்றால் மீண்டும் சிபு முதல்வராகிவிடுவார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications