மக்களவை தொகுதி அறிமுகம்-33: தேனி

முந்தைய பெரியகுளம் தொகுதியில் இருந்த சட்டசபைத் தொகுதிகள் - பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி.
தற்போது இதில், சேடப்பட்டி தொகுதி நீக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதில் புதிதாக உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகியவை இணைந்துள்ளன. பெரியகுளம், சோழவந்தான் தொகுதிகள் தனித் தொகுதியாகியுள்ளன.
புதிய தேனி தொகுதியின் கீழ் வரும் சட்டசபைத் தொகுதிகள் - சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம்.
அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றாக விளங்கியது பெரியகுளம். இங்கு அதிமுக இதுவரை 6 முறை வென்றுள்ளது. நான்கு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு 2 முறை வெற்றி கிட்டியது. சுதந்திரா கட்சிக்கு 2 முறை வெற்றி.
முக்குலத்தோர் மற்றும் நாயுடு சமூகத்தினரின் வாக்குகள் இங்கு பெரும்பான்மையாக உள்ளன. கன்னடத்தைத் தாய் மொழியாக கொண்ட கவுண்டர்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் இங்கு ஒரு முறை வெற்றி பெற்றார். மறு முறை தோல்வியுற்றார்.
தற்போது இந்தத் தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது.
சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில்,
சோழவந்தான் தொகுதியில் திமுகவின் மூர்த்தி, உசிலம்பட்டியில் அதிமுகவின் மகேந்திரன், ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் ஜெயலலிதா,
பெரியகுளத்தில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், தேனியில் அதிமுகவின் கணேசன், போடிநாயக்கனூரில் திமுகவின் லட்சுமணன், கம்பத்தில் மதிமுகவின் ராமகிருஷ்ணன், சேடப்பட்டியில் அதிமுகவின் துரைராஜ் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.
தேனி தொகுதியில் இந்த முறை மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நிற்கக் கூடும் என்ற பேச்சு உள்ளதால் தேனி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதிமுக சார்பில் அதற்கேற்ற ஹெவிவெயிட் நிறுத்தப்படக் கூடும். தினகரனுக்கு மறுபடியும் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
கடந்த தேர்தல் நிலவரம் (பெரியகுளம்)
ஆரூண் ரஷீத் (காங்.) - 3,46,851
டிடிவி தினகரன் (அதிமுக) - 3,25,696
வெற்றி வித்தியாசம் - 21,155 வாக்குகள்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1952-57 - கே. சக்திவேல் கவுண்டர் - காங்.
1957-62 - நாராயணசாமி - காங்.
1962-67 - மலைச்சாம தேவர் - காங்.
1967-71 - அஜ்மல் கான் - சுதந்திரா கட்சி.
1971-77 - அஜ்மல் கான் - சுதந்திரா கட்சி.
1977-80 - ராமசாமி - அதி்முக.
1980-84 - கம்பம் நடராஜன் - திமுக.
1984-89 - செல்வேந்திரன் - அதிமுக.
1989-91 - ஆர். முத்தையா - அதிமுக.
1991-96 - ராமசாமி - அதிமுக.
1996-98 - ஞான குருசாமி - திமுக.
1998-99 - ஆர். முத்தையா - அதிமுக.
1999-04 - டிடிவி தினகரன் - அதிமுக.
2004 - ஆரூண் ரஷீத் - காங்.












Click it and Unblock the Notifications