லஞ்சம்- பேரூராட்சி செயல் அலுவலர் கைது!
அரூர்: தர்மபுரி அருகே கடையின் உரிமத்தை புதுப்பிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர், எழுத்தர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியமண்டி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சம்பத் (56). இவர் அரூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் குளிர்பான கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையின் உரிமத்தை புதுப்பிக்க ரூ.20 ஆயிரத்து 200யை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தியுள்ளார். மேலும் தனது பெயரில் உள்ள கடையின் உரிமத்தை தனது மனைவி தனலட்சுமி பெயரில் மாற்றி தர கோரியுள்ளார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக அலைகழிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சம்பத் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்ட போது, சம்பத்திடம் பேரூராட்சி செயல் அலுவலர் லஞ்சமாக ரூ.3 ஆயிரம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க முன் வராத சம்பத் இது குறித்து தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதல்படி சம்பத் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் பணம் கொடுத்தார்.
செயல் அலுவலர் அதை அருகில் உள்ள தனது பதிவு எழுத்தர் இளங்கோவிடம் கொடுக்க உத்தரவிட்டார். அப்போது தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
அதன்பின் டி.எஸ்.பி. நாச்சியப்பன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் தலைமையில் போலீசார் அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications