திண்டுக்கல் அருகே 2 போலி டாக்டர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி டாக்டர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி மகன் சந்திரசேகரன் (52). இவர் சுகாதாரத்துறையில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் சந்திரசேகரன் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் அருகே கமலா மருத்துவமனை என்ற பெயரில் நோயாளிகளுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.
அதே போன்று ஒட்டன்சத்திரம் கைராசி நகரைச் சேர்ந்த அருணகிரி (40) என்பவரும் தும்மிச்சம்பட்டி பிரிவு அருகே அண்ணாமலை மருத்துவமனை என்ற பெயரில் நோயாளிகளுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இது குறித்து தஞ்சை அகில இந்திய மனித உரிமை கண்காணிப்பகத்தை சேர்ந்த அமீர் சைது என்பவர் இடையகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இடையகோட்டை போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் போலி டாக்டர்கள் என்று தெரிய வந்தது.
இதனையடுத்து போலி டாக்டர்கள் அருணகிரி, மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications