அதிமுக பக்கம் செல்கிறார் ராமதாஸ்: வி.சிக்கும் அழைப்பு-திருமா நிராகரிப்பு

கூட்டணி குறித்து ஒரே நேரத்தில் திமுக, அதிமுக என இரு தரப்பிடமும் பேச்சு நடத்தி வருகிறது பாமக. பாமக தலைவர் ஜி.கே.மணி அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடனும், திமுக மத்திய அமைச்சர் ராசாவுடனும் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதே நேரத்தில் அதிமுகவுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தான் விரும்பும் 8 தொகுதிகளை யார் கொடுத்தாலும் அவர்களுடன் கூட்டணி சேரத் தயார் என்ற நிலையில் இருக்கிறது பாமக.
இந் நிலையில் திமுக, காங்கிரஸை விட அதிமுகவிடமிருந்து ராமதாசுக்கு தொகுதி விஷயத்தில் சாதகமான பதில் வந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்குச் செல்ல அவர் தயாராகி விட்டதாகத் தெரிகிறது.
தன்னுடன் விடுதலைச் சிறுத்தைகளையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள ராமதாஸ், திருமாவளவனுடன் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
அப்போது, எங்களுடன் நீங்களும் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று ராமதாஸ் வைத்த கோரிக்கையை திருமாவளவன் நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
நான் அதிமுக கூட்டணிக்கு வர மாட்டேன். திமுக கூட்டணியில் தான் இருப்பேன். காங்கிரஸ் நெருக்குதலால் என்னை கூட்டணியை விட்டு திமுக நீக்கினாலும் கூட அதிமுக பக்கம் வர மாட்டேன் என்று அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
விடுதலைச் சிறுத்தைகளை நீக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைகை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி நிராகரித்துவிட்டது நினைவுகூறத்தக்கது.
முன்பு அவர் மருத்துவமனையில் இருந்தபோதே அவரை சந்தித்த திருமா, என்னை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உங்களை நெருக்கினால் நான் விலகத் தயார். அதே நேரத்தில் அதிமுக பக்கம் போக மாட்டேன் என்று கருணாநிதியிடம் உறுதியளித்திருந்தார்.
அப்போது கருணாநிதி, தம்பி உன்னை நீக்கச் சொல்லி காங்கிரஸ் என்னை நெருக்கினால், நீக்க முடியாது என்று அவர்களை நான் நெருக்குவேன் என்று கூறியதை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
அதிமுக கூட்டணிக்குச் செல்ல முடிவெடுத்துவிட்ட பாமகவை எப்படியாவது தடுக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் தீவிரமாகியுள்ளது. ஆனால், ராமதாஸ் என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டு போகட்டும் என்ற நிலையில் திமுக உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
திமுக 7 தொகுதிகள் மட்டுமே தர முன் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications