பாசிச வெறி பிடித்த திமுக அரசு-வைகோ

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வைகோ பேசுகையில்,
பாசிச வெறி பிடித்த தமிழக அரசின் காவல்துறை பொய் வழக்கு தொடர்ந்து சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயலாகும்.
ஒரு நாஞ்சில் சம்பத்தை கைது செய்தால் ஓராயிரம் நாஞ்சில் சம்பத்துக்கள் உருவாவார்கள் என்பதை தமிழக அரசு மறந்து விடக்கூடாது.
இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்துவிட்டு ஈழத் தமிழர்களுக்கு மருந்துகளையும் அனுப்பி வருகிறது. இவ்வாறு இரட்டை வேடம் போட்டு துரோகம் செய்து வரும் மத்திய அரசையும் அதற்கு துணையாக இருக்கும் திமுக அரசையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழர்களுக்கு துரோகம் செய்து வரும் காங்கிரசுக்கும், அதற்கு துணை நிற்கும் திமுகவிற்கும் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார் வைகோ.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications