பாக். பிரதமர் கிலானியை 'ஒழிக்க' காய் நகர்த்தும் சர்தாரி!
இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பிரதமர் யூசுப் கிலானியை ஒழித்துக் கட்டப் பார்க்கிறார். இதற்காக அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாக', என பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவரான சௌத்ரி ஷுஜாத் ஹூஸைனுடன் ரகசியப் பேச்சு வார்த்தையை ஏற்கெனவே சர்தாரி முடித்துவிட்டார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுளளது.
அதிபருக்கு அதிக அதிகாரங்களைத் தரும் அரசியல் அமைப்பை மாற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் கிலானி என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான் முஸ்லிம் லீக் உதவியுடன் கிலானியை பிரதமர் பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தனக்கு வேண்டியவரை நியமிக்க சர்தாரியும் முஸ்லிம் லீக்கும் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களாகவே பலமான செய்திகள் உலா வருகின்றன.
போன தேர்தல் வரை முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபை தீவிரமாக ஆதரித்து வந்தது முஸ்லிம் லீக் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு ராணுவப் புரட்சி மூலம் அதிபரான முஷாரப், தனது அதிகாரத்தைக் கொண்டு பாகிஸ்தான் அரசியலமைப்பையே மாற்றிவிட்டார். அதிபர் நினைத்தால் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தைக் கலைத்து, பிரதமரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்ற வகையில் சட்டங்களைத் திருத்தியிருந்தார்.
இதை மாற்ற பிரதமர் கிலானி முயற்சித்தது, இப்போதைய அதிபர் சர்தாரிக்கு வேப்பங்காயாக உள்ளது. இதனால் பிரதமர் கிலானியையே தூக்கியடிக்கும் முடிவுக்கு வந்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications