மக்களவை தொகுதி அறிமுகம்-34: விருதுநகர்

Subscribe to Oneindia Tamil

Viruthunagar
விருதுநகர்: இதுநாள் வரை இருந்து வந்த சிவகாசி தொகுதி ஒழிக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் என்ற பெயரில் இத்தொகுதி உருவாகியுள்ளது.

சிவகாசி தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்து வந்தன.

தற்போது திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகியவை மதுரை மாவட்டத்தில் உள்ளவை. மற்ற நான்கும் விருதுநகர் மாவட்டத் தொகுதிகள்.

மதிமுகவின் சமீப கால கோட்டையாக இருந்து வந்த தொகுதி சிவகாசி. வைகோ இங்கு இருமுறை வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய எம்.பி. ரவிச்சந்திரனும் மதிமுகவைச் சேர்ந்தவரே.

புதிய விருதுநகர் தொகுதியில் வைகோ போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விருதுநகர் விஐபி தொகுதயாகக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கடந்த தேர்தல் நிலவரம்

ஏ.ரவிச்சந்திரன் (மதிமுக) - 4,69,072
கண்ணன் (அதிமுக) - 3,04,555
வெற்றி வித்தியாசம் - 1,64,517 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1971 - ஜெயலட்சுமி - காங்.
1977 - ஜெயலட்சுமி - காங்.
1980 - செளந்தரராஜன் - அதிமுக.
1984 - செளந்தரராஜன் - அதிமுக.
1989 - காளிமுத்து - அதிமுக.
1991 - கோவிந்தராஜுலு - அதிமுக.
1996 - அழகிரிசாமி - சிபிஐ
1998 - வைகோ - மதிமுக
1999 - வைகோ - மதிமுக
2004 - ரவிச்சந்திரன் - மதிமுக

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+