40 தொகுதிகளையும் கைப்பற்ற உழைப்போம்: சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்
நெல்லை: 40 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் உழைப்போம் என்று மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய கோரி நெல்லை மாநகராட்சி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பேசினார் ரவிச்சந்திரன்.
அப்போது அவர் கூறுகையில்,
இலங்கையில் நடந்து வரும் தமிழர்கள் படுகொலையை கண்டித்து மதிமுக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இது அரசியல் பலி வாங்கும் நடவடிக்கையாகும்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த நாஞ்சில் சம்பத் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
மதி்முக தற்போது முக்கிய கால கட்டத்தில் உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக பாடுபட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி வரும் காங்கிரசுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
பணம், அதிகாரம் மூலம் மதி்முக தொண்டர்களை விலை பேச முடியாது. தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இப்போதே கடுமையாக உழைக்க வேணடும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications