புதுக்குடியிருப்பில் மகனுடன் இருக்கிறார் பிரபாகரன் - ராணுவம்
கொழும்பு: புதுக்குடியிருப்பு பகுதியில் மகன் சார்லஸுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
பிரபாகரன் குறித்து இலங்கை ராணுவம் அவ்வப்போது செய்திகளைத் தந்து வருகிறது. முதலில் அவர் நாட்டை விட்டு தப்பி விட்டார் என்றார்கள். பின்னர் தப்பியிருக்க மாட்டார் என்றார்கள். பின்னர் ஆயிரக்கணக்கானோருடன் பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்று கதை விட்டனர்.
இப்போது புதுக்குடியிருப்பில் தனது மகன் சார்லஸுடன் பதுங்கு குழிகளுக்குள் இருக்கிறார் பிரபாகரன் என்று கூறியுள்ளது இலங்கை ராணுவம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தப்பி பாதுகாப்புப் பகுதிக்கு வந்த மக்களை மேற்கோள் காட்டி இலங்கை ராணுவம் தனது இணைய தளச் செய்தியில் இதை தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் பிரபாகரனும், அவரது மகன் சார்லஸ் அந்தோனி சீலனும் உள்ளனர்.
அவ்வப்போது வெளியே வரும் அவர்கள், அரசை எதிர்த்துப் போராடுவதற்காக அப்பகுதியிலிருந்து தமிழர்கள் வெளியேறக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
பிரபாகரனும், அவரது மகனும் வெளியே வரும்போது ஆயுதம் தாங்கிய புலிகளின் பலத்த பாதுகாப்புடன்தான் வருகின்றனர்.
பிரபாகரன் இப்போதைக்கு இலங்கையை விட்டுச் செல்ல மாட்டார். அப்பாவி பொதுமக்களை வதைத்து ஒரு சூழ்நிலையை உருவாக்கி போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்துவார்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தேடப்படும் குற்றவாளி பிரபாகரன். எனவே, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றாலும் ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்க முடியாது எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications