கல்விக் கடன் ஏழைகளுக்காகவே -மதுரை உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை: திறன்வாய்ந்த ஏழை மாணவர்களுக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவர் ஹரிஷ் பாபு. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதாகவும், அதற்கு, குடும்பத்தில் போதிய வசதி இல்லையென்றும் அதனால் வங்கிக் கடன் வேண்டி வங்கியை அனுகிய போது வங்கி, கல்விக் கடன் தர மறுத்து தனது மனுவை தள்ளுபடி செய்து விட்டதாகவும், எனவே தனக்கு கல்விக் கடன் வழங்க நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
தேர்வில் சராசரி மதிப்பெண்கள் பெற்று பயிற்சி கட்டணம் கட்ட வங்கி கடன் தர வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.
கல்வி கடன் ஏழைகளுக்கும், திறன் வாய்ந்த மாணவர்கள் பயன்பெறவுமே வழங்கப்படுகிறது.
வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டால், இந்த திட்டம் தோல்வி அடைந்து விடும்.
மனு தாக்கல் செய்தவர் தேர்வில் 70 சதவீத மதிப் பெண் பெற்றுள்ளார். அவரது பெற்றோர் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் பயிற்சி கட்டணம் செலுத்தக் கூடிய நிலையிலேயே உள்ளனர்.
வங்கி மேலாளர்கள் கல்விக்கடன் வழங்குவதில் உரிய முறைகளை பின்பற்றுகிறார்கள்.
மேலும் ரிசர்வ் வங்கி கல்விக் கடன் குறித்து, விடுத்துள்ள சுற்றறிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி நீதிபதி மாணவர் ஹரீஸ்பாபுவின் மனுவை தள்ளுபடி உத்தரவிட்டார்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications